அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய-கஜகஸ்தான் இணையான சானியா மிர்சா, யாரோஸ்லாவா ஷ்வெடோவா இணை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
பெலாரஸ், ரஷ்ய இணையான ஓல்கா கவர்ட்சோவா, அல்லா குட்ரியாட்சேவா இணையை 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
இந்த சீசனில் சானியா வெல்லும் 3வது இரட்டையர் பட்டம் ஆகும் இது. ஒட்டுமொத்தமாக சானியா இரட்டையரில் வெல்லும் 12வது பட்ட்மாகும் இது.
சானியாவின் வழக்கமான இரட்டையர் இணையன வெஸ்னினா இந்தத் தொடரில் பங்கேற்காததையடுத்து ஸ்க்வெடோவாவுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்த வெற்றி மூலம் இருவரும் 11,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொண்டனர்.