இந்திய ரசிகர்கள் அவமதித்தனர்: பாகிஸ்தான் ஹாக்கி அணித் தலைவர் புகார்
செவ்வாய், 19 அக்டோபர் 2010 (13:30 IST)
காமன்வெல்த் விளையாட்டு ஹாக்கி போட்டியில் இந்திய ரசிகர்கள் அவமதித்ததாக பாகிஸ்தான் ஹாக்கி அணித் தலைவர் ஷிஷான் அஷ்சப் புல் புகார் கூறியுள்ளார்.
காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி ஜொலிக்காததற்கு இந்திய ரசிகர்கள் நடவடிக்கையே காரணம் என்று கூறியுள்ள அஷ்சப் புல், மைதானத்தில் ஆடிக் கொண்டிருந்த எங்களை அவர்கள் மிகவும் அவமதித்தனர் என்று புகார் தெரிவித்துள்ளார்.
இது எங்களை மன வலிமையுடன் ஆட முடியாமல் செய்தது. மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய ரசிகர்கள் எங்களை மிகவும் அவமானமாக நடத்துகின்றனர் என்றும் ஷிஷான் அஷ்சப் புல் கூறியுள்ளார்.