கிரிக்கெட் செய்தி: இந்திய கிரிக்கெட் அணிக்கு தோல்விக்கு மேல் தோல்வி
புதன், 7 செப்டம்பர் 2011 (11:54 IST)
சவுதம்டனில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. அபாரமாக விளையாடிய குக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்குவதாக இருந் தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதமானது. பின்னர் பூவா தலையா வ ென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்யமுடிவு செய்துள்ளது. மழை காரணமாக போட்டி தாமதமானதால் 23 ஓவர்களாக குறைக்கப்பட ்டது. தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 30 ரன் எடுத்திருந்தபோது பட்டேல் 28 ரன்னில் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து வந்த திராவிட் 32 ரன்னிலும், கோலி 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் ரஹானே - ரெய்னா இணை ஓரளவு விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது. 54 ரன் எடுத்திருந்த ரஹானே ஸ்வான் பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ரெய்னா 40 ரன்னும், அணித் தலைவர் தோனி 6 ரன்னிலும் வெளியேறினர். 23 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பிரெஸ்னன், ஸ்வான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 22.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணித் தலைவர் குக் அபாரமாக விளையாடி 63 பந்தில் 80 ரன் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். கீஸ்வெட்டர் 46 ரன்னும், பெல் 25 ரன்னும், போப்ரா 24 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டும், வினைய் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர். 80 ரன் குவித்த இங்கிலாந்து அணித் தலைவர் குக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலியில் பார்க்க x