பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பையை எந்த அணி வேண்டுமானாலும் வெல்லலாம் என்று கூறியுள்ளார்.
"நான் இருபதுக்கு 20 கிரிக்கெட்ட பார்ப்பதில்லை, அதில் திறமைக்கு வேலையில்லை, அது வெறும் அதிர்ஷ்டம் சார்ந்த ஒரு ஆட்டம் அதனால்தான் கூறுகிறேன் T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்று".
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் தனிமைப் படுத்தப்படுவதில் இந்தியாவின் பங்கு பற்றி குறிப்பிடும் இம்ரான் கான், "மும்பை தாக்குதலுக்கு பிறகு இலங்கை அணி கூட பாகிஸ்தான் சென்று விளையாடக்கூடாது என்று விரும்பியதாக நான் கேள்விப்பட்டேன், இதனால் அந்த சாத்தியக் கூறையும் நான் மறுப்பதற்கில்லை" என்றார் இம்ரான்.
ஆனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகரிகளையே இந்த விஷயத்தில் கண்டித்து பேசினார். 2011 உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து தங்களை நீக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிந்துள்ள போது விவாதத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியிருக்கவேண்டும், மேலும் மற்ற ஆசிய நாடுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் திரட்டியிருக்க வேண்டும், ஆனல் அவர்கள் இதனைச் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானில் உலகக் கோப்பை நடக்த்தப்பட முடியாவிட்டால், 2011 உலகக் கோப்பை போட்டிகளையே வேறு நாட்டிற்கு மாற்றியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளவில்லை என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.