அமித்ஷாவின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன்?

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:56 IST)
அமித்ஷாவின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன்?
அமித் ஷாவின் மகன் தேசியக் கொடியை வாங்க மறுத்தது ஏன் என்ற சர்ச்சையை இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து ஜெய்ஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜெய்ஷா இந்த போட்டியை ரசித்து இந்தியா வெற்றி பெற்றதற்கு கைதட்டி ஆரவாரம் செய்தார்.
 
அப்போது அவரது அருகில் இருந்த ஒருவர் தேசியக்கொடியை கொடுக்க வந்தபோது அதை வாங்க மறுத்தது குறித்து வீடியோ வைரல் ஆகி பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் இதற்கு ஜெய்ஷா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் மட்டுமின்றி ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பதவியிலும் உள்ளார். எனவே அவர் ஆசிய நாடுகள் அனைத்துக்கும் பொதுவானவர் என்பதால் இந்திய கொடியை மட்டும் வாங்க அவர் விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்திய வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர் எழுந்து கைதட்டி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டினார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்