இந்த போட்டியின் போது ஆஸி தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கும் நடுவருக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வார்னர் பேட் செய்யும் போது டேஞ்சர் ஸோனில் வந்து விளையாடுவதாக நடுவர் எச்சரித்தார். இதனால் அதிருப்தி அடைந்த வார்னர் அந்த இடத்தில் விளையாட கூடாது என்று ரூல் புக்கில் இருக்கிறதா? எனக்கு அதைக் காட்டுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகின்றன.