டோனி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறார். அதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆனால் டி20 போட்டிகளில் அவரின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. எனவே, டோனி இளைஞர்களுக்கு வாய்ப்பை விட்டு கொடுக்கலாம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணி சிறப்பாக இருக்கும் என்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர், டோனி கோலியுடன் இணைந்து ரன் குவித்திருந்தால் இந்தியா வெற்றிப்பெற்றிருக்கும் என்றார். இவரும் டோனி டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.