4 விக்கெட்டுக்களை இழந்து தென்னாப்பிரிக்கா திணறல்.. வெற்றி யாருக்கு?

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:10 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது. 
 
இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வரும் நிலையில் 22 ஓவர்களில் நான்கு கிரிக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் செய்து வருகிறது. 
 
தென்னாப்பிரிக்கா அணியின் முதல் நான்கு முக்கிய விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில் தற்போது மார்க்கம் மற்றும் டேவிட் மில்லர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும்  அவுட் ஆகிவிட்டால் அதன் பின்னர் அனைவரும் பவுலர் என்பதால் தென்னாப்பிரிக்கா அணி இன்னும் எடுக்க வேண்டிய 135 ரன்கள் எடுக்குமா என்பது கேள்விக்குரியே. 
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறிவரும் நிலையில் பாகிஸ்தான் அணிக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்