கொரோனாவில் இருந்து மீண்டார் ருதுராஜ்: இன்றைய போட்டியில் பங்கேற்பாரா?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (07:30 IST)
கொரோனாவில் இருந்து மீண்டார் ருதுராஜ்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான ருதுராஜ் கெய்க்வார்டு சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் அவர் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை 
 
தற்போது அடுத்தடுத்த இரண்டு சோதனைகளில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது மட்டுமின்றி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலமும் முடிவடைந்தது. இதனையடுத்து நேற்று அவருக்கு சென்னை அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட அனுமதி கிடைத்தது 
 
இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது. இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வார்டு அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தற்போது சென்னை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே ருதுராஜ் கெய்க்வார்டு களமிறங்கினால் அவருக்கு பதிலாக யார் வெளியேறுவார் என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது 
 
தொடக்க வீரர்களாக வாட்சன், முரளி விஜய் ஆகிய இருவரும் மீண்டும் களம் இறங்கலாம் என்றும் அனுபவ வீரர்களான டுபிளஸ்சிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து களமிறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
இளம் வீரரான சாம் கர்ரன் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டிலும் கலக்கி வருவதால் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பியூஷ் சாவ்லா விக்கெட் எடுக்கும் வீரராக உள்ளார் அதேபோல் தீபக் சஹாரும் நல்ல பார்மில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ருதுராஜ் மீண்டும் அணியில் இணைந்தால் யாரை தோனி வெளியேற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்