தள்ளிப்போன ஒலிம்பிக்: செலக்‌ஷன் மீண்டும் நடத்தப்படுமா??

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (10:58 IST)
2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் சரியான தேதி குறித்த அறிவிபை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் பாராலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 11,000-த்துக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்வதாக இருந்தனர். இதில் 57% பேர் ஏற்கனவே போட்டியில் பங்கேற்க தேர்வாகி இருந்தனர். 
 
எனவே, 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் 2021 போட்டியிலும் நேரடியாக பங்கேற்கலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்