உலகக்கோப்பை இறுதி போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (14:55 IST)
உலகக்கோப்பை இறுதி போட்டி: அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணி ரன்களை குவிக்க திணறி வருவதோடு அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது
 
அந்த அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. பாகிஸ்தான் அணியின் ஷான் மசூத் 35 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அதேபோல் ஷதாப் கான் 20 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்
 
 இன்னும் 4 ஓவர் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி அதிகபட்சம் 150 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இலக்கு 150க்கு இருந்தால் கண்டிப்பாக இங்கிலாந்து அணி மிக எளிதில் அந்த இலக்கை எட்டி கோப்பையை தட்டிச் செல்லும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் கூறிவருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்