சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொன்ற மர்ம நபர்கள் ! குடும்பததினர் காயம் !

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (19:19 IST)
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், தனிப்பட்ட காரணங்களுக்கு சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  சுரேஷ் ரெய்னாவில் மாமாவை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளதாகவும்  அவரது அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  ஒரு பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

அவரது மாமாவின் மகன்கள் இருவரும் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்