தோனி உடல்தகுதி உடையவரா? வலுக்கும் கேள்விகள்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (11:37 IST)
நியூஸிலாந்துக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டியில் ஆடிய தோனி சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி 15-ம் தேதி சர்வதேச போட்டியில் ஆடுகிறார். 


 
 
இடையில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் அவர் ஆடவில்லை. மற்ற வீரர்கள் தங்கள் உடல்தகுதியை உள்நாட்டுப் போட்டிகளில் ஆடி நிரூபித்தே அணியில் நுழைய முடியும்.
 
இந்நிலையில் தோனி எப்படி நேரடியாக உடற்தகுதி பெறுபவராகிறார் என்று முக்கியமான கேள்வியை திலிப் வெங்சர்க்கார் எழுப்பியுள்ளார்.
 
தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ரஞ்சி போட்டிகளிலும் அவர் ஆடுவதில்லை. அவர் எப்படி தன் உடற்தகுதியை நிரூபிக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ராகுல், புவனேஷ் குமார், மொகமது ஷமி ஆகியோர் உட்பட பலரும் உடற்தகுதியை உள்நாட்டு போட்டிகளில் ஆடியே நிரூபித்து மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
அடுத்த கட்டுரையில்