பைக் ரேஸர் சைக்கிள் ஓட்டி மரணமடைந்த துயரம்!!

Webdunia
புதன், 24 மே 2017 (15:44 IST)
முன்னாள் மோட்டோ ஜிபி சாம்பியன் நிக்கி ஹேடன் சைக்கிளில் சென்ற போது நேற்று உயிரிழந்தார்.


 
 
பார்முலா 1 கார் பந்தயம் போல உலகம் முழுதும் நடக்கும் பைக் ரேஸ் மோட்டோ ஜிபி. இதன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் நிக்கி ஹேடன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 
 
கடந்த வாரம் தனது சைக்கிளில் சென்ற போது, அவரின் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த ஹேடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்