ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா!!!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2016 (12:33 IST)
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. முதல் டெஸ்டில் 197 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் 178 ரன்கள வித்திசாயத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி உள்ளது.

 
இந்த நிலையில் இன்று இந்தூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் நோக்கில் இந்தியா உள்ளது. 
 
இரண்டு அணிகளையும் பொறுத்த வரை பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சமபலத்துடன் உள்ளது. தொடரை இழந்த நியூசிலாந்து அணி வீரர்கள், ஆறுதல் வெற்றி பெற போராடுவர். குறைந்தபட்சம் டிரா செய்யவாவது அணி போராடும். 
 
காய்ச்சலால் அவதிப்பட்ட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்டில் விளையாட வில்லை. தற்போது காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ள வில்லியம்சன் 3வது டெஸ்டில் விளையாட உள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து அணி பலமடைந்து உள்ளது. அந்த அணியில் லதாம், ரோஞ்சி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தற்போதய நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

ரெமோ வீடியோ திரைவிமர்சனத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்