சிட்னியில் இந்தியா தரமான சம்பவம் – புஜாரா, பண்ட் சதம் !!!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (12:02 IST)
சிடினியில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 622 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.

சிட்னியில் நேற்று தொடங்கிய 4 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் கோஹ்லி, தொடக்க வீரர்கள் ராகுல்(9), மற்றும் கோஹ்லி(23), ரஹானே(18) ஆகியோர் ஏமாற்றினாலும் மயங்க் அகர்வால் (77) மற்றும் புஜாராவின் (130*) ரன்களால் இந்தியா முதல் நாள் முடிவில் 303 ரன்களுக்கு 4 விகெட்டை இழந்து ஆட்டத்தை முடித்தது.

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளை விளையாடிய இந்திய அணியில் மேலும் ஹனுமா விஹாரி 3 ரன்கள் மட்டுமே சேர்த்து 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புஜாரோவோடு ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் புஜாரா நிதானமாக விளையாட மறுமுனையில் அதிரடிக் காட்டினார் பண்ட். சிறப்பாக விளையாடி இரட்டைச் சதத்தை நோக்கி சென்ற புஜாரா 193 ரன்கள் எடுத்திருந்த போது லயன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதைத் தொடர்ந்து களம் கண்ட ஜடேஜா பண்ட்டோடு சேர்ந்து ரன்வேட்டையில் ஈடுபட்டார். அதிரடியாக விளையாடிய பண்ட் சதமடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். இவர்களின் அதிரடியால் இந்தியாவின் ரன் வேகமாக உயர்ந்தது. 81 ரன்கள் சேர்த்திருந்த போது ஜடேஜா லயன் பந்தில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் கோஹ்லி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பண்ட் 159 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக லயன் 4 விக்கெட்களும், ஹேசில்வுட் 2 விக்கெட்களும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸி தற்போது வரை விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்