3 நாடுகள் கிரிக்கெட்: விராத் கோஹ்லி, தோனி நீக்கமா?

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (09:04 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 போட்டி தொடர்  இன்றுடன் முடிவடைவதால் இந்திய அணி விரைவில் நாடு திரும்புகிறது. இதனையடுத்து இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி முடிவடைகிறது

இலங்கையில் 70வது சுதந்திர தினத்தை அடுத்து நடைபெறும் இந்த T20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் தோனி ஆகியோர் இடம்பெறவில்லை. இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என்றும்  ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முத்தரப்பு தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் போட்டிகள் நடக்கும் தேதிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

மார்ச் 6: இலங்கை v இந்தியா
மார்ச் 8: வங்கதேசம் v இந்தியா
மார்ச் 10: இலங்கை  v வங்கதேசம்
மார்ச் 12: இந்தியா v இலங்கை
மார்ச் 14: இந்தியா v வங்கதேசம்
மார்ச் 16: வங்கதேசம்v இலங்கை
மார்ச் 18: இறுதிப்போட்டி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்