ஆதாம் கருப்பு நிறத்தவர்தான் – ஹசீம் ஆம்லா உணர்ச்சிகர பதிவு!

வியாழன், 16 ஜூலை 2020 (18:02 IST)
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட நிலையில் கருப்பினத்தவருக்கு ஆதரவுப் போராட்டங்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளன.

கருப்பு நிற மக்களின் வாழ்வும் முக்கியம் எனும் கருத்துருவாக்கம் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உருவான இந்த ஹேஷ்டேக் தற்போது உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளில் உள்ளவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த லுங்கி இங்கிடி இதைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

அவருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஹசிம் அம்லா ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது கூற்றின் படி ‘இஸ்லாமிய மரபின் படி உலகின் முதல் மனிதனான ஆதாம் கருப்பு தோல் உள்ளவர்தான். எனவே மானுடகுலத்துக்கே இந்தப் பாரம்பரியத்தின் ஆழமான வேர் இருக்கிறது. எனவே கருப்பு என சொல்வதற்கு வெட்கப்பட தேவையில்லை.

நான் உட்பட மோசமான வசைகளை எதிர்கொண்டுள்ளோம். இங்கிடி போன்றவர்கள் எங்களை பிரதிநிதித்துவம் செய்வதை வரவேற்கிறோம். உலகில் உள்ள ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் ஆதரவாக நான் நிற்கிறேன் அதனால்தான் லுங்கி இங்கிடிக்காகவும் நான் நிற்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்