அதில் இந்திய கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்ட்யா மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் அவர் நீண்ட நாட்களாக விடுப்பில் உள்ளது போல இருக்கிறது. காயமடைவதற்கு முன்பாக அவருடைய பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. அவரின் பிரச்சனை என்னவென்றால் அவரின் உடல் எடைதான். அவர் இன்னும் கொஞ்சம் எடை ஏற்ற வேண்டும். ஒல்லியாக இருப்பதால் அவர் அடிக்கடி காயம் அடைந்து வருகிறார். அதை அவர் விரைவில் சரி செய்துகொள்வார் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.