அனுமதி அளித்தும் திறக்கப்படாத திரையரங்குகள்!

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (16:40 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் பல திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இன்று முதல் தனித்திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வார இறுதியில் திறக்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனாலும் எந்த புதிய படத்தின் ரிலீஸும் திட்டமிடப்படாததால் பல இடங்களில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. திறந்த திரையரங்குகளில் பழைய மற்றும் டப்பிங் படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்