சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடங்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற செய்திகளும் ஊடகங்களில் கசிந்து வரும் நிலையில் தோனி மீண்டு விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.
இந்நிலையில், சினிமா நடிகர், நடிகையர் பிறந்தநாளின்போது அவர்களது ரசிகர்கள் விதவிதமாக Common Display Picture வெளியிடுவது வழக்கம். அதேபோல் கிரிக்கெட்டில் தல என அழைக்கப்படும் தோனியின் பிறந்தநாளுக்கு விஷேசமான ஒரு CDP ஐ உருவாக்கி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
#AdvanceHBDMahi #dhoni