சி எஸ் கே முக்கிய வீரருக்கு காயம்… ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (17:19 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாஃப் டு ப்ளசீஸ் காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை அணி ஐபிஎல் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிஎஸ்கே அணியின் ஓபனரான ஃபாஃப் டூ பிளஸிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்