ஜோகோவிச்சின் விசா மீண்டும் ரத்து: ஆஸ்திரேலிய அரசு அதிரடி நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:40 IST)
பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசாவை சமீபத்தில் ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் முறையாக அவரது விசாவை ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த செர்பியா நாட்டின் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் தஞ்சமடையும் விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்தார். அதன்பின் நீதிமன்ற தலையீட்டால் அவருக்கு ஆஸ்திரேலிய அரசு விசா வழங்கியது
 
இந்த நிலையில் தற்போது ஜோகோவிக்கால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுநலன் கருதி அவரது விசாவை ரத்து செய்வதாக அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் டென்னிஸ் வரலாற்றில் உலக அளவில் அதிக சாதனைகள் செய்த ஜோகோவிச்சிற்கு தற்போது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஜோகோவிச் மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளார் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்