ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் துபாய் சென்று இருந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டது
இந்த வாக்கு வாதம் காரணமாகவே அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தோனி ஓய்வு அறிவித்த அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு அறிவித்து தங்கள் நட்பை நிரூபித்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் தங்குவதற்கு அளிக்கப்பட்ட அறை திருப்தி அளிக்காததால் தான், சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.