பந்தைக் கொடுங்க எனக் கேட்டு வாங்கிய பூம்ரா… இந்த கிரவுண்ட்டில் இப்படி ஒரு ஸ்பெல்லா!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:04 IST)
இந்திய அணி ஓவல் டெஸ்ட்டில் இமாலய வெற்றி பெற்றுள்ள நிலையில் பூம்ராவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்பெல் கிரிக்கெட் ரசிகர்களால் புகழப் பட்டு வருகிறது.

ஓவல் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் கோலியின் கேப்டன்சி மற்றும் அணித்தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் இந்தியா கலக்கியது. அதிலும் பூம்ரா தட்டையான ஆடுகளத்தில் 22 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இரண்டாவது செஷனில் பந்து ரிவர்ஸ் ஆவதை அறிந்து கோலியிடம் தானே பந்தைக் கேட்டு வாங்கி வீசி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்