5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா: செங்கல்பட்டில் பரபரப்பு!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:12 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
 
பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஒரு சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 மாணவ மாணவிகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே மாவட்டத்தில் ஒரே நாளில் மாணவர்கள் ஆசிரியர்கள் என ஏழு பேர்களுக்கு ஒரு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்