2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி: உலகின் முதல் நாடு இதுதான்!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (07:56 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைவிரித்தாடுகிறது என்பதும் இதன் காரணமாக லட்சக்கணக்கான உயிர் பலியாகி உள்ளது என்பதும் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் நலிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் அலை இரண்டாவது அலையையும் தாண்டி மூன்றாவது அலையும் ஒரு சில நாடுகளில் தோன்றியுள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றுதான் கொரோனா வராமல் தடுக்க ஒரே வழி என்று அனைத்து நாடுகளின் சுகாதார துறை அமைச்சகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது
 
இந்த நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே முதல் முறையாக இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா நாடு தொடங்கியுள்ளது.
 
கியூபாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் செல்லும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தடுப்பூசி போட்ட பின்னரே பள்ளிகள் திறக்கும் என்றும் கியூபா நாட்டின் அரசு அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்