பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.
அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதிக் கொள்வதே இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே மோதிக் கொள்கின்றன. அந்தவகையில் அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடரில் போட்டியிடுகின்றன. இந்த போட்டி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இந்தியாவுடனான போட்டியில் நாங்கள் வெல்வோம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் விளையாடி வருகிறோம். அங்குள்ள மைதான நிலைமைகள் எங்களுக்கு அத்துபடி. அதனால் எங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளார்.