பாகிஸ்தான் அணியில் மீண்டும் சோயிப் மாலிக்!

திங்கள், 11 அக்டோபர் 2021 (15:54 IST)
டி 20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டி 20 அணியை 2007 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் வழிநடத்தியவர் சோயிப் மாலிக். இதில் 2009 ஆம் ஆண்டு கோப்பையை பாகிஸ்தான் வென்றது. அதன் பின்னர் அவர் சில ஆண்டுகள் அணியில் நீடித்தார். பின்னர் வருவதும் போவதுமாக இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் பாகிஸ்தான் டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் இருந்த வீரர் சோயிப் மசூத் காயம் காரணமாக விலகியதை அடுத்து மாலிக்குக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. மாலிக் உள்ளே வந்ததற்கு அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 39 வயதாகும் மாலிக்  இதுவரை 121 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்