விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: இந்தியா படுதோல்வி!

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (20:49 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய கூறியதை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 37.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது கேப்டன் ஃபின்ச் 110 ரன்களும் வார்னர் 128 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் 
 
இந்திய அணியின் மொத்த வீரர்களும் எடுத்த ரன்களை ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே எடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது 
 
ஸ்கோர் விவரம்
 
இந்தியா: 255/10  49.1 ஓவர்கள்
 
தவான்: 74
கே.எல்.ராகுல்: 47
ரிஷப் பண்ட்:28
ஜடேஜா: 25
 
ஆஸ்திரேலியா: 255/0  37.4 ஓவர்கள்
 
டேவிட் வார்னர்: 128
பின்ச்: 110
 
ஆட்டநாயகன்: டேவிட் வார்னர்
 
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்