கோலிக்கு அளித்த விருது தவறு: நீதிமன்றத்தை நாடும் மல்யுத்த வீரர் - விளக்கமளித்த விளையாட்டுத்துறை

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (11:33 IST)
கோலி, மீராபாய்க்கு கேல் ரத்னா அறிவித்துள்ள விளையாட்டுத்துறை, அவரக்ளை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ள தமக்கு விருது வழங்கவில்லை  என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா நீதிமன்றத்தை நாட உள்ளார்.
கடந்த 20ந்தேதி மத்திய அரசு 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய்க்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 8 பேருக்கு துரோணாச்சார்யா விருதுகளும், 20 பேருக்கு அர்ஜூனா விருதுகளும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கோலியையும், மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகளை பெற்றுள்ளேன். இருந்தபோதிலும் விளையட்டுத்துறை என்னை புறக்கணித்துள்ளது என கூறினார். எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நான் நீதிமன்றத்தை நாடுவேன் என பஜ்ரங் ஆவேசமாக பேசினார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், புள்ளிகளை வைத்து விருதுகள் தேர்வு செய்யப்படுவதில்லை. ஒரு வீரர் அந்த துறையில் செய்த மொத்த சாதனையும் கணக்கில் வைத்துக்கொண்டே விருது வழங்கப்படுகிறது. கிரிக்கெட் துறையை பொறுத்தவரை ஐசிசி தரவரிசையில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் மீரா பாய் சானு மட்டுமே ஒலிம்பிக் சாம்பியனாக உள்ளார். இதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்