உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

Mahendran
செவ்வாய், 25 ஜூன் 2024 (11:09 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் முடிந்த கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம்  அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 115  ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 19 ஓவர்களில் 114 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிய நிலையில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆப்கன் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு  தகுதி பெற்றுள்ளது என்பதும் அந்த அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் உலக கோப்பையில் இருந்து வெளியேறியது என்பதும் முதல் முறையாக அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்