உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 20வது லீக் போட்டி இன்று லண்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 26 ரன்களில் அவுட் ஆனாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமாகிய பின்ச், இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி 132 பந்துகளில் 153 ரன்கள் குவித்தார். இதில் 15 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனையடுத்து ஸ்மித் 73 ரன்களும் மேக்ஸ்வெல் 46 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 334 ரன்கள் குவித்தனர்.
இந்த தொடரில் சர்வசாதாரணமாக 300க்கும் மேற்பட்ட ரன்களை முதலில் பேட்டிங் செய்யும் அணி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் இலங்கையின் டிசில்வா மற்றும் உடானா தலா இரண்டு விக்கெட்டுக்களையும், மலிங்கா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு விக்கெட்டுக்கள் ரன் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டது.
இன்னும் சில நிமிடங்களில் 335 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது