2 வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி சற்று தடுமாற்றம்...

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (14:49 IST)
இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


 
 
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் இன்றி முதல் போட்டியில் களமிறங்கிய வீரர்களே தற்போது களமிறங்கவுள்ளனர்.
 
ஆஸ்திரேலிய அணியில் பால்க்னெர், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஓபனிங் பேட்மென்களாக களமிறங்கி ரோகித் மற்றும் ரகானே நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆனால், ஐந்தாவது ஓவரில் கவுல்டர்-நைல் பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார்.
 
ரோகித் 14 பந்தில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் இறங்கியுள்ளார்.
 
இந்திய அணி தற்போது 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 29 ரன்னுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்