மே.இ.தீவுகள் அணிக்கு இமாயல இலக்கு: ரோஹித், ராகுல், விராத் அபார பேட்டிங்

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (20:50 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
 
இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களின் பந்துகளை விளாசி அடித்தனர். ரோகித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் அடித்தார்.
 
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆன போதிலும், கேப்டன் விராட் கோலி அதிரடியாக பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர்களுக்கும் பவுண்ட்ரிகளுக்கும் திருப்பினார். ஒரு பக்கம் கே.எல்.ராகுல் அதிரடியாக பேட்டிங் செய்து 91 ரன்கள் எடுக்க, இன்னொரு பக்கம் விராத் அதிரடியாக விளையாடி70 ரன்கள் எடுத்ததால்  இந்திய அணியின் ஸ்கோர் 240 ஆக உயர்ந்தது 
 
241 என்ற இமாலய இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி எட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை வெல்லும் அணி என்பதால் இரு அணிகளும் தொடரை வெல்ல தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்