சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் மயம்.. லக்னோ அணிக்கு இமாலய இலக்கு..!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (21:29 IST)
சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்க்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி சிக்ஸர் மழையாக பொழிந்து 217 ரன்கள் எடுத்துள்ளது.
 
கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த தல தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சென்னை அணியின் ருத்ராத் மற்றும் கான்வே ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை கொடுத்த தனர்
 
இதனை அடுத்து சென்னை அணி தற்போது 20 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்துள்ளது. 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்