பெங்களூரு அணிக்கு 176 ரன்கள் இலக்கு! அடுத்த சுற்றுக்கு செல்லுமா ஐதராபாத்?

Webdunia
சனி, 4 மே 2019 (21:46 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 54வது லீக் போட்டி இன்று பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராத்கோஹ்லி, பந்துவீச்சை தேர்வு செய்ததால் ஐதராபாத் அணி தற்போது பேட்டிங் செய்து முடித்துள்ளது.
 
ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் 70 ரன்களும், குப்தில் 30 ரன்களும், விஜய் சங்கர் 27 ரன்களும், சஹா 20 ரன்களும் எடுத்துள்ளனர். ஐதராபாத் அணியை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுக்களையும், சயினி  2 விக்கெட்டுக்களையும், சஹால், கேஜ்ரோலியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. அந்த அணியில் கோஹ்லி, பார்த்தீவ் பட்டேல், டிவில்லியர்ஸ், ஹெட்மயர், வாஷிங்டன் சுந்தர் உள்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எளிதில் எட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்