சினிபாப்கார்ன் - வித்யாபாலனை இயக்கும் கமல்

ஜே.பி.ஆர்.
சனி, 13 பிப்ரவரி 2016 (12:19 IST)
வித்தியாசமான படங்களை முயற்சி செய்யும் சித்தார்த், துணிச்சலாக எடுத்த முடிவு ஜில் ஜங் ஜக். 
 
சித்தார்த்தை கவர்ந்த மகேஷிண்டே பரிகாரம்


 


 
வித்தியாசமான படங்களை முயற்சி செய்யும் சித்தார்த், துணிச்சலாக எடுத்த முடிவு ஜில் ஜங் ஜக். படம் ஒரு குறிப்பிட்டவகை ரசிகர்களை மட்டுமே கவர்ந்துள்ளது.
 
இந்நிலையில், மலையாளத்தில் வெளியான, மகேஷிண்டே பரிகாரம் படத்தை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
 
இரண்டு வருடங்களுக்கு முன் ஓஹோ வென்றிருந்த பகத் பாசில், தொடர்ச்சியாக தோல்விப் படங்களை தந்து, பிருத்விராஜ், நிவின் பாலி, துல்கர் சல்மான், திலீப், ஜெய்சூர்யா என பலருக்கும் அடுத்த இடத்தில்தான் உள்ளார்.
 
அவர் விரும்பியது ஒரேயொரு ஹிட். அதனை சென்ற வாரம் வெளியான மகேஷிண்டே பரிகாரம் தந்துள்ளது. 
 
அறிமுக இயக்குனர் திலீஷ் போத்தனின் இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவானது. இதன் காமெடி, சென்டிமெண்ட் அனைத்தும் சரியாக வொர்க் அவுட்டாக கேரளாவில்  திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
 
சித்தார்த் இதன் தமிழ் ரீமேக்கில் நடித்தாலும் ஆச்சரியமில்லை.
 
லியோனார்டோ டிகாப்ரியோ ஆஸ்கர் வெல்வாரா?


 


 
இந்த மாத இறுதியில் ஆஸ்கர் விருது வழங்கும்விழா நடக்கிறது. பொதுவாக எந்தப் படம் சிறந்தப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வெல்லும் என்பதில்தான் கவனம் குவிந்திருக்கும்.
 
இந்தமுறை, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது டிகாப்ரியோவுக்கு கிடைக்குமா என்பதே அனைவரின் கேள்வி.
 
ஆஸ்கர் விருதுகளிலும் அரசியல் உண்டு. மார்ட்டின் ஸ்கார்சஸியின் ஆஸ்தான நடிகரான டிகாப்ரியோவுக்கு ஆஸ்கர் விருது திட்மிட்டே மறுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
 
த ரெவனென்ட படத்துக்காக அவர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

பரிந்துரைக்கப்பட்டிருப்பது இது ஆறாவது முறை.
 
கோல்டன் குளோப் விருது வாங்கியிருக்கும் நிலையில், ஆஸ்கர் விருதும் அவருக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம் கிடைக்கிறதா என்று.
 
வித்யாபாலனை இயக்கும் கமல்


 

 
மலையாள எழுத்தாளர் கமலாதாஸின் வாழ்க்கை வரலாறை இயக்குனர் கமல் படமாக்குகிறார். மலையாளத்தின் முதல் படம் விகிதகுமாரனை இயக்கிய டேனியலின் வாழ்க்கை வரலாறை சில வருடங்கள் முன் கமல் படமாக்கினார்.
 
செலுலாயிட் என்ற அந்தப் படம் ஒரு ஆவணமாக போற்றப்படுகிறது. அவரது புதிணுய முயற்சி, மலையாள எழுத்தாளர் கமலாதாஸின் வாழ்க்கையை படமாக்குவது.
 
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த கமலாதாஸின் வாழ்க்கை பல மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டது.
 
கடைசியில் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரது வேடத்தில் நடிக்க வித்யாபாலனை கேட்க, உடனே அவரும் சம்மதம் கூறியுள்ளார்.
 
இந்தப் படம் மலையாளம், இந்தி என இரு மொழிகளில் தயாராகிறது.