சிவலிங்க திருமேனியை குளிர்விக்க தாராபாத்திரம் வைக்கப்படுவது ஏன்...?

Webdunia
ஐப்பசி தொடங்கியதும் மழைக்காலம் ஆரம்பிக்கும். அது முடிந்ததும் வருகிற கார்த்திகை மாதம் மழை கொஞ்சம் கொஞ்சமாக முடிந்து, குளிர் எட்டிப்பார்க்கும் மாதம். அதாவது, மழையும் குளிரும் கலந்துகட்டி, உடலில் உஷ்ணத்தைப் பரப்புகிற மாதம் என்கிறார்கள்.

அபிஷேகப் பிரியன் என்று சிவனாரைக் குறிப்பிடுகிறோம். சிவலிங்கமானது, எப்போதும் வெப்ப தகிப்புடன் இருக்கக் கூடியது. வெம்மையான சிவலிங்கத் திருமேனியைக் குளிர்விக்கும் தாராபாத்திரம் வைக்கப்பட்டிருக்கும்.
 
பல ஆலயங்களில், மூலவரான சிவலிங்கத் திருமேனிக்கு மேலே தாராபாத்திரம் வைத்திருப்பார்கள். இதில் நிரப்பப்படும் நீரானது, தாரையாக, துளியாக, துளித்துளியாக லிங்கத்தின் மீது விழுதபடியே இருக்கும்.
 
தாராபாத்திரத்தைப் போல் குளுமையாக இறைவன் அருளும் தருணம்தான் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று போற்றுகிறார்கள். 
 
திருக்கார்த்திகை தீப நன்னாளில், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, சிவனாரை மனதார வேண்டிக்கொண்டால், ஐந்து பேருக்கேனும் தயிர்சாதம் பொட்டலம்  வழங்கினால், மங்காத செல்வங்கள் இல்லத்தில் சேரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுப்பார் சிவனார். சிவனாரும் பார்வதியும்  இல்லத்தில் அமைதியையும் சுபிட்சத்தையும் தந்தருள்வார்கள் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்