பரணி தீபம் எப்போது எந்த நேரத்தில் ஏற்றவேண்டும்...?

Webdunia
பரணி தீபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளை, நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுகிறார்கள். ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. 


பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. ஆனால் நாம் வீடுகளில் காலையில் ஏற்றுவதை விட மாலையில் ஏற்றி வழிபடலாம். 
 
மாலை வேளையில் ஐந்து மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி வழிபடலாம். சிவபெருமானை வேண்டி வணங்கக் கூடிய பரணி தீபத்தை வீட்டில்  ஏற்றுவதால் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும் என்பது ஐதீகம்.
 
ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ எவ்வளவோ தவறுகளை செய்கிறார்கள். அவைகளில் இருந்து விமோசனம் பெற கார்த்திகை மாத பௌர்ணமி அன்று ஏற்றக்கூடிய  பரணி தீபத்தை வீட்டிலும் முறையாக ஏற்றி வழிபடலாம்.

ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். பரணி தீபத்தன்று தனியாக ஐந்து  விளக்குகளை ஏற்றுவது தான் விசேஷம். 
 
வீட்டில் வழக்கம் போல் பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் தனியாக ஒரு தாம்பூலத் தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள் குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் மிகச் சிறப்பான  பலன்களை கொடுக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்