கோவிலில் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள் என்ன...?

Webdunia
கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும். நடந்துகொண்டே நெற்றியில் விபூதி குங்குமம் இடக்கூடாது.


பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது. பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது. 
 
நந்தியை தொட்டு வணங்கக் கூடாது. நந்தியின் காதில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
 
தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது. கோயிலுக்குள் உறங்கக் கூடாது. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது. அந்த சன்னதியின் விமான கோபுரத்தை வணங்க வேண்டும்.
 
சாஷ்டாங்க நமஸ்காரம் மூலவருக்கோ பிரகார மூர்த்திகளுக்கோ தனித்தனியாக செய்யக்கூடாது. கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய  வேண்டும்.
 
விஷ்ணு கோயிலில் வழிபாட்டுக்கு  பின்பு கோவிலில் அமராமல் வீட்டிற்குக் கிளம்பி செல்ல வேண்டும். சிவன் கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும். 
 
கோயிலில் இருந்து திரும்பி வரும் போதும் ராஜ கோபுர தரிசனம் செய்து கும்பிட வேண்டும். கோயிலில் இருந்து வேறு யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது. நேராக  நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.  
 
கோயிலுக்குள் மனிதர்களை வணங்கக் கூடாது. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது. கோயிலுக்குச் சென்று வந்து  வீட்டில்  நுழையும்  போது  கால்களைக் கழுவக் கூடாது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்