திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வதால் என்ன பலன்கள்...?

Webdunia
சனி, 21 மே 2022 (10:36 IST)
திருவோண விரதம் என்பது, பெருமாளுக்கு உகந்தது. இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.


ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு, திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும். மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும்.

அதுமட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்