தீபாவளியன்று மட்டுமே வணங்க முடியும் இந்த தெய்வத்தை; எங்கு தெரியுமா...?

Webdunia
வாரணாசி எனும் காசியில் ஓடும் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள படித்துறைகளில் ஒன்று ஹனுமன்காட். இப்படித் துறைக்கு அருகில் உள்ள காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் வெள்ளியிலான முப்பெருந்தேவியர் எழுந்தளியுள்ளார்கள். 
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ஆகிய இந்த முப்பெரும் தேவியர்களையும் ஒவ்வொரு வருடமும் தீபாவளியை ஒட்டி வரும் திரயோதசி, சதுர்த்தி, அமாவாசை, பிரதமை ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இதனை திரிதேவி தரிசனம் என்று  போற்றுவர். நான்கு நாட்களும் நிவேதனமாக லட்டு சமர்ப்பித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். இந்த நான்கு நாட்கள் வழிபாடுகள்  முடிந்ததும் திரையிட்டு மூடிவிடுவார்கள். 
 
கங்கை நதியில் நீராடி இந்த மூன்று அம்பிகைகளையும் ஒரே சமயத்தில் தரிசிக்க குடும்பத்தில் செல்வ வளம் பெருகும். நினைத்த நல்ல காரியங்களீல் வெற்றி கிட்டும். இதேபோல் தமிழகத்திலும் உமையவள், சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரை ஒரே சந்நிதியில் தரிசிக்கும்  கோவில் உள்ளது. இது கோயம்புத்தூரில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன ஈச்சனாரி வினாயகர் கோவிலுக்கு அருகில்  உள்ளது. இக்கோவிலை மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி மந்திர் என்று அழைக்கிறார்கள்.
 
இக்கோவிலின் பிரதான தெய்வம் ஸ்ரீ மகாலட்சுமி தாயார்தான். நடுநாயகமாக மகாலட்சுமியும், வலப்புறம் பார்வதி தேவியும், இடப்புறம்  சரஸ்வதியும் அமர்ந்துள்ளனர். இவர்களை தரிசித்தால் வேண்டியது கிட்டும்; வீரம், செல்வம், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பர். இங்கு  நவராத்திரி, கேதார கௌரி விரதம் என பல விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தீபாவளியன்று முப்பெரும் தேவியருக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்