யோகா செய்வதால் ஏற்படும் அற்புத பலன்கள்...!!

Webdunia
யோகா என்ற சொல்லுக்கு இணைதல் என்று பொருள். யோகா இந்தியாவில் உள்ள 6 தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். இந்து தத்துவத்தின் படி யோகா என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.

நன்மைகள்:
 
ஞாபக சக்தி மற்றும் செயற்திறனை அதிகரிக்கிறது. உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிலைப்படுத்துகிறது. மன அழுத்தம், படபடப்பு ஆகியவற்றிலிருந்து  விடுவிக்கிறது.
 
ஆழ்ந்து உணரும் ஆனந்தம், அமைதி, நிறைவை வழங்கிடும். ஓய்வு நிலையில் இருந்து திரும்பும் உடலுக்கு புத்துணர்வு அளிக்கிறது. அனைவருடனும் இணைந்து செயல்படும் திறனையும், பழகும் முறையையும் மேம்படுத்துகிறது. நாட்பட்ட நோய்களில் இருந்து விடுவித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
யோகத்தில் மொத்தம் எட்டு அங்கங்கள் இருக்கின்றது. அதில் இமயம், நியமம், ஆசனம், தாராணை, தியானம், சமாதி, பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்று எட்டு அங்கங்கள் உள்ளது இவற்றில் இமயத்தில்-மிதவாதம், சாரமற்ற தன்மை, பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் .
 
மன அழுத்தம், பயம் மற்றும் படபடப்பிலிருந்து விடுவிக்கிறது. நாட்பட்ட நோய்களான ஒவ்வாமை, தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன், சர்க்கரை நோய் முதுகுவலி போன்றவற்றிற்கு சிறந்த பலனளிக்கிறது. உள்நிலையில் அமைதி, ஆனந்தம் மற்றும் நிறைவை வழங்குகிறது.
 
இரைப்பையின் செயல்பாடு இயல்பாகிறது. தகவல் பரிமாற்றம் மற்றும் பிறருடன் பழகுவதில் மேம்பட்ட நிலை மனத்தெளிவு, உணர்ச்சிகளில் சமநிலை மற்றும்  உற்பத்தி திறன் மேம்படுகிறது. நாள் முழுவதும் ஆற்றல் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க உதவுகிறது. தன்னம்பிக்கை ஏற்படுத்துகிறது. அஜீரண கோளாறுகள்  சீரடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்