அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பணம் !!

Webdunia
சனி, 4 டிசம்பர் 2021 (10:46 IST)
கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும்.

நம் பித்ருக்களுக்கு அதாவது இறந்துவிட்ட நம் தாய், தந்தையருக்குப் பிடித்தமான உணவை நைவேத்தியம் செய்யலாம். அப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து, பித்ருக்களை மனதார வழிபடுவது மிக அவசியம்.
 
அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
 
சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை தினம் சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். 
 
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்