சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக துளிகள்....!

Webdunia
உழைப்பில் உறுதி கொண்டு வாழ்நாளைப் பயனுள்ளதாக்குங்கள். உலகில் பிறந்ததற்கு அறிகுறியாக ஏதாவது நல்லசெயலைச் செய்து உங்கள் அடையாளத்தை  உலகில் விட்டுச் செல்லுங்கள்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை  ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
 
இறைவனுக்காகவே ஒவ்வொரு செயலும் நடைபெறட்டும். உண்பதும், உறங்குவதும், காண்பதும் ஆகிய அனைத்தும் அவனுக்காகவே.
 
நமக்கென உள்ளதை பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரதிபலன் எதிர்பார்த்து செயலாற்றினால் நன்மை உண்டாவதில்லை.
 
உங்களை உலகம் தூற்றினாலும், கொண்ட லட்சியத்திலிருந்து விலகாமல் உறுதியுடன் செயல்படுங்கள். நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.
 
எஜமானனைப் போல செயல்படுங்கள். அடிமை உணர்வை கைவிட்டு சுதந்திரமாக பணிபுரியுங்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மை படைத்திருக்கிறான். உயர்வான செயல்களைச் செய்தால் வாழ்க்கை பயனுடையதாகும்.
 
நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் உங்களுக்குள்ளே இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்