முருகனுக்கு உகந்த கிருத்திகை விரதத்தின் சிறப்புக்கள் !!

Webdunia
முருகப் பெருமானை கிருத்திகை, செவ்வாய்க் கிழமைகளில்விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கவும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும். 

செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும்  மிக சிறந்த நாள். இந்த நாளில் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவது சிறப்பானது.
 
ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. அதனால் தான் செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளாக பக்தர்களால்  வணங்கப்படுகிறது.
 
முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை.. இன்றய தினம் முருகனை விரதம் இருந்து வணங்க வேண்டும். ஞானகுருவான முருகரை வழிபடுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. 
 
முருகர், எதிரிகள், அரக்கர்கள் மனதில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த தனது தாய் பார்வதி யிடமிருந்து "வேல்" பெற்று கொண்டார். அந்த சக்தி பொருந்திய வேலை அனைவரும் வழிபாடு செய்கின்றனர்.
 
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி சிவபெருமான் ஆசிர்வதித்தார். 
 
கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். 
 
ஞானகுருவான முருகப் பெருமானை விரதம் இருந்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும், நோய்கள் நீங்கும் எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்