வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்...!!

Webdunia
மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள். இதில், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்வரை வருகின்ற ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதான தட்சிணாயனமாக அமைகிறது. 
இந்த தட்சிணாயனத்தின் நிறைவுப் பகுதியில் தோன்றும் 'பிரம்ம முகூர்த்தம்' என்ற தேவர்களின் விடியற்காலைப் பொழுதுதான் மார்கழி. அந்தப் பிரம்ம முகூர்த்தத்திலும், மகாவிஷ்ணு அரிதுயிலிலிருந்து விழித்தெழும் அந்த விநாடிப் பொழுதுதான், ஏகாதசியாம். 
 
விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள்  ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில்  ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.
 
சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி - கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி - சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி - ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த  புண்ணியம் உண்டாகும். ஆவணி - மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.
 
புரட்டாசி - நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி - சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை - மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை - பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி - சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி - தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில்  பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்