முருகனுக்கு மிகவும் விசேஷமான தேய்பிறை சஷ்டி !!

Webdunia
சனி, 21 மே 2022 (17:42 IST)
காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியும் என்றால் அந்நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் சுத்தம் செய்து முருகன் சிலைக்கு மற்றும் முருகனுடைய வேல் இருந்தால் அதற்கும் தேன் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.


முருகனுக்கு உகந்த வாசம் மிகுந்த மலர்களை சாற்றி முருகப்பெரு மானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும். ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுதல் சிறப்பு.

ஒவ்வொரு விளக்கும் கிழக்கு நோக்கி இருக்குமாறு வைக்கவேண்டும். பின்னர் நைவேத்தியத்திற்கு முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நைவேத்திய பொருளை படைக்கலாம் அல்லது உங்களால் முடிந்தால் சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து வையுங்கள் போதும். இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம், முருகனுக்கு நாவல் பழம் என்றால் மிகவும் இஷ்டமான ஒரு பழம் ஆகும்.

இந்நாளில் முருகனுடைய ஸ்தோத்திரங்கள் அல்லது மந்திரங்கள், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்க வேண்டும். அது போல காலையில் ஆரம்பித்த விரதத்தை மாலையில் இதே போல விளக்கு ஏற்றி நைவேத்தியம் படைத்து முடித்துக் கொள்ளுங்கள். வைகாசியில் வரக்கூடிய இந்த தேய்பிறை சஷ்டி முருக னுக்கு ரொம்பவே விசேஷமானது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்