கரூர்: எட்டு ஊர் மக்கள் மழை வேண்டி அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

Webdunia
கரூர் அருகே தோகைமலை பகுதியில் மேட்டுமாரியம்மன், கன்னிமார் அம்மன், பிடாரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பால்குடம் மற்றும் தீர்த்தக் குடங்களை நேர்த்திக் கடன்களை செலுத்தினர் பொதுமக்கள்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலை அருகே கூடலூர் கிராமம் தெற்குப்பட்டியில் அமைந்திருக்கும் மேட்டு மாரியம்மன்,  கன்னிமார் அம்மன், பிடாரி அம்மன், அழவாயி அம்மன், ரெங்கநாதர் வினாயகர் ஆகிய தெய்வங்களுக்கு எட்டு ஊர் சார்ந்த பொதுமக்கள் மழை  வேண்டி தங்கள் நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தினர். 
இன்று குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு எட்டு பட்டி கிராம மக்கள் ஊருக்கு வடபுறம் உள்ள எல்லை தெய்வத்திடம் கொண்டு வந்த புனித நீர் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு பால்குடம், தீர்த்தக்குடம், கரகம் ஆகியவற்றுடன் வாண  வேடிக்கைகளுடன் மேளதாளம் முழங்க, இளைஞர்களின் ஆட்டத்துடன் ஸ்ரீ மேட்டு மாரியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எட்டு பட்டி ஊர்  நாட்டாமை தலைமையிலும் ஊர் முக்கியஸ்தார்கள் முன்னிலையிலும் பால்குடம் கோயிலைச் சுற்றி வந்து அம்மனுக்கு பால், தீர்த்த  அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் எட்டுப்பட்டி கிராம மக்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. இவை  அனைத்தும் விழாக் குழுவினரால் நடத்தப்பட்டது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்